Tuesday, 23 January 2007

தஞ்சாவூர்க் கதம்பம்

அனைவருக்கும் நல்வரவு,

சிஃபியில் திரு. மலர் மன்னன் 'கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது' என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கடந்த சில ஆண்டுகளில் சுமார் ஏழு லட்சம் பேர் இந்த தஞ்சை மண்டலத்தில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்; இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை இந்த மண்டலம் இழக்கப் போகிறது.

இங்கு இயந்திரங்கள் சார்ந்த தொழிற்சாலைகள் கிடையாது. விவசாயம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படாததால் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் நெல் உற்பத்தியே; அதுவோ பணப்பயிரில்லை. ஏக்கருக்கு நான்காயிரம் ரூபாய் சம்பாதித்தாலே பெரிது.

இந்த நிலையில் விளை நிலங்கள் கை மாறுகின்றன்; வியாபாரங்கள் பெருமளவு கைமாறிவிட்டது. இதை பரம்பரை வர்த்தகர்களும் உணர்ந்து கவலைப்படுகிறார்கள்.

சில ஊர்களில் கோயில்களே விலைக்குக் கேட்கப்படும் அவலம் உள்ளது; நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடித்திரிந்த மண் இது; ஆனால் இன்று பயங்கரவாதப் பதர்களுக்குப் பாயிரம் பாடப்படுகிறது. இதை உளவுத்துரையினரும் கவலையோடு சொல்கின்றனர்.

தஞ்சவூர்க்கதம்பம் என்பது ஒரு காலத்தில் தமிழகத்தையே மணக்கச்செய்தது. இன்று அந்தக் கதம்பச்சரத்தில் வாசனையில்லை. பல வண்ண மலர்களும் காணாது போய்விடுமோ ?

கலா ரஸனை, பன்முகக் கலாசாரம், ஆன்மீக உள்ளோட்டம் என்று பரிமளித்த மண் இன்று 'ஏகத்துவம்" என்ற ஒற்றைப் பாலைவனமாய் பொசுக்கத்தொடங்கியுள்ளது. இயற்கையின் பசுமை தவழ்ந்த மண்ணில் செயற்கப் பச்சை பரவத் தொடங்கியுள்ளது.

கலாசாரம், மொழி, அரசியல், பாரம்பர்யக் கலைகள் இவற்றைச்சார்ந்த மக்கள் தொகை இயல்(Demography) வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

காஷ்மீரச்சைவத்தைக் காணோம், குங்குமப் பூ கைமாறிப் போய்விட்டது. தஞ்சைக் கதம்பம் ?

பல வண்ண வாசனை மலர்கள் மீண்டும் இந்தத் தஞ்சை மண்ணில் நிரம்ப உதவுவோர் உள்ளனரா ?

உதவுவீர்களா!

என்றும் நல்வரவு.

கண்ணன்