Monday, 23 April 2007

ஒன்று என்றால் ஒன்றுதானா?

ஒன்று என்றால் ஒன்றுதானா?

ஹெச்,ஜி. ரஸூல் அவர்கள், இஸ்லாத்தின் ஏக இறை தத்துவத்தைப் பற்றியும் இஸ்லாத்தின் வணக்க முறைகள், நோன்புகள் பற்றியும் ஒரு இஸ்லாமானவருக்கே உள்ள பெருமையொடு சொல்கிறார். நல்லது. அதில் அவருக்கு உரிமையுள்ளது. நமக்கும் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை.

"ஆனால், ஒரு சில விஷயங்களில் கொஞ்சம் தெளிவிருந்தால் நல்லது.

ஒன்று: பசு வதைத் தடை மூலமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் கியோரின் மலிவான உணவுப் பழக்கத்திற்கு வேத மார்க்கம் ஊறு விளைவிப்பதாகச் சொல்கிறார்.

முதலில் தாழ்த்தப் பட்டோர் அனைவருமே பசு மாமிசம் சாப்பிடுபவர் அல்லர்; அதனாலேய அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறார்கள். பசு மாமிசம் தள்ளுபடி இல்லை என்று இருக்கும் பிரிவினர்கூட "அதைச்சாப்பிடுவதே எங்கள் உரிமை; அந்த உரிமையை நாங்கள் என்னாளும் விட்டுத்தரமாட்டோம்" என்று பிடிவாதம் பிடிப்பவர்களாக இல்லை. மாறாக, நியாயத்தை எடுத்துச் சொன்னால் அந்தப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ப்வராகவே இருக்கிறார்கள்; எனவே தாழ்த்தப்பட்டவர் உணவுப்பழக்கம் பற்றிய பிரச்சனை எதுவும் இல்லை.

சரி, இந்த விஷயதில் சிறுபான்மையோர் அதிலும் குறிப்பாக இஸ்லமானவரின் மன நிலை என்ன?

தம்முடைய இறை நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ள இவர்கள், இந்த நாட்டில் வழும் மக்களில் பெரும்பான்மையோர்களால் இறை அம்சம் உள்ளதாக நம்பப்படும பசுக்களை 'குர்பானி' கொடுக்காமல் தவிர்த்தால் என்ன? தம் நம்பிக்ககளைப் பற்றி பெருமையோடு நினக்கும் இவர்கள் அடுத்தவரின் நம்பிக்கைககுக்கும் மரியாதை கொடுத்தால் என்ன? அதுதானே உண்மையான நல்லிணக்கம்.

மேலும், பசு வம்சங்களின் விவசாயத்திற்கான பயன்பாடு இன்றும் குறைந்து விடவில்லை. இன்னும் அந்தத் தேவை அதிகமாகவே இருக்கிறது. விவசாயத்தின் மொத்தப் பணித்தேவைகளுக்கான ட்ராக்டர், டில்லர் போன்ற இயந்திரங்களின் உற்பத்தியும் இன்னும் முழுமையடையவில்லை; "வை குறைவாக இருப்பது?? நல்லதே.

அந்த இயந்திரங்களால் தொடர்ந்து ஏற்படும் எண்ணைச் செலவு-அன்னிய செலாவணி இழப்பு, அவை உற்பத்தி செய்யும் சுற்றுப்புற மாசு, நமது சிறு விவசாயிகளின் குறைவான வாங்கும் சக்தி இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மாட்டைக் கொண்டு பணிகளை நடத்துவதே லாபகரமானது. தின்னும் வக்கோலுக்கு சாணி போட்டுவிடும்; அது புதுப்பிக்கத்தக்க மாற்று எரி சக்தி-இயற்க்கையான உரம். இறந்தபின் தோல் பயன்படும்; சுற்றுப்புற மாசுமில்லை, நஷ்டமுமில்லை.

நல்லது, முக்யமான விஷயத்திற்கு வருவோம். நான்கு வேதங்களும் இன்னபிற ஹிந்து நூல்களும் ஓர் இறைக் கொள்கையையே எடுத்து ஓதுவதாகச்சொல்கிறார். இதே விஷயத்தை வேறு வலைத்தளங்களில் இன்னும் சில இஸ்லாமான அன்பர்களும் எழுதியிருந்த்தைப் படித்தேன். ஆச்சர்யமாக இருந்தது; அப்படியானால் இவர்கள் வேதங்களையும், கீதையையும் ஒப்புக்கொள்கிறார்களா!

ஸ்ரீமத் பகவத் கீதையில் 'என் ஒருவனையே சரணடை' என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். சரணடையப்படவேண்டியவர் ஸ்ரீ கிருஷ்ணன்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார்களா!

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசீயில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து, அப்பனே! நான் சொல்ல வேண்டியவைகளையெல்லாம் சொல்லிவிட்டேன்; எல்லாவற்றையும் நீ நன்கு யோசித்து உனக்கு ஏற்றதை தீர்மானம் செய்து கொள்" என்று சொல்கிறார். இப்படியே குரானும் சொல்கிறதா?

நான் புரிந்து கொண்டவரை, இஸ்லாம் சொல்லும் 'ஒன்று' என்பது ஒன்று எனும் எண்ணிக்கையையே குறிப்பிடுகிறது; வேதாந்தம் சொல்லும் 'ஒன்று' என்பது ஒருமையைக் குறிக்கிறது.

அதாவது, அங்கிருப்பதுதான் இங்கும் இருக்கிறது, இங்கிருப்பதுதான் எங்கும் இருக்கிறது அந்த வகையில் அனைத்தும் ஒன்றுபட்டதே. அண்டத்தில் உள்ள்தே பிண்டத்தில் உள்ள்து என்பதே வேதாந்த்தக் கருத்தாக உள்ளது.

படைத்தவனும் படைக்கப்பட்ட பொருளும் ஒன்றே எனபதையே வேதாந்தம் சொல்கிறது. இதைத்தான் குரானும் சொல்கிறதா?

அப்படியானால் இரண்டாவதைப்பற்றிப் பேசு?வனை இஸ்லாமானவர்கள் காஃபிர் என்கிறார்களே ஏன்? வேதாந்திகள் முப்பத்து முக்கோடி என்று முழங்கினாலும் அந்த ஒன்றின் ஒடுக்கத்தில் அடங்குகிறார்கள்.

வேதங்களும் சிவ, விஷ்ணுவைப் பற்றிப் பேசுகிறது; அதன் அடிப்படையில் அமைந்ததாகச்சொல்லப்படுகிற புராணங்களும் அவதாரங்களைப் பற்றிப் பேசுகின்றன; "த்வைத சிந்தாந்தை நிறுவிய ஸ்ரீ தி சங்கரரும் அறு வகைச் சமயத்தையும் ஒழுங்குபடுத்தினார்; அத்வைதத்தின் அடிபடையில் "வற்றை மறுதலிக்கவில்லை--அவை, சிவனைப்போற்றும் சைவம், விஷ்ணுவைப் போற்றும் வைணவம், சக்தியைப் போற்றும் சாக்தம், குமரனைப் போற்றும் கௌமாரம், ஸூர்யனைப் போற்றும் சௌரம், கணபதியைப் போற்றும் காணாபத்யம்--இவை அத்வைததிற்கு தடையுமில்லை; வேதத்திற்கு முரணும்ில்லை.

வேதமும் "ஏகம் ஸத்-விப்ராஹா பகுதா வதந்தி" என்றே சொல்கிறது; அதாவது சத்தியம் ஒன்றே; இதை விவரம் அறிந்த்தவர்கள் பலவிதமாக வர்ணித்துச் சொல்கிறார்கள் என்று சொல்லி மனித சிந்தனைக்கு சுதந்திரம் கொடுக்கிறது.

இது குரானுக்கு ஆகுமானதா?



கண்ணன்

4 comments:

Anonymous said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

Anonymous said...

//முதலில் தாழ்த்தப் பட்டோர் அனைவருமே பசு மாமிசம் சாப்பிடுபவர் அல்லர்;//

எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று சொல்வதிலும் நஷ்டமில்லை நண்பரே, இது எப்படி இருக்கிறதென்றால் நாங்கள் தாழ்த்தப்பட்டவர் அனைவரையும் கோவிலுக்குள் விட மறுக்கிறோம் என்று சொல்லவில்லை. அவர்களாவே உள்ளே வரவிரும்பாதவர்களும் இருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது.

காலில் போட்டுக் கொள்ளும் தோல் செருப்பு, பசுவின் தோலா, எருமை தோலா என்று பார்த்து தான் போட்டுக் கொள்கிறீர்களா ? அல்லது தோல் செருப்புகள் அத்தனையும் மாடுகள் இயற்கையாக இறக்கும் போது எடுக்கப்பட்ட தோல்களில் இருந்து செய்யப்பட்டதா ?

தூணில் இருப்பான் துரும்பிலும் இருக்கிறான் இறைவன் என்று இஸ்லாமியருக்கு பதில் சொல்லும் அன்பரே, தலித் குடிசைக்குள் இருக்கிறானா ? என்று கேட்கும் போது பலர் பம்முவது ஏன் ? புலையனுக்கு பகவான் மோட்சம் கொடுத்தார் கதையெல்லாம் இங்கே தேவையில்லை. இந்துமத சாமியார்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தாழ்த்தப்பட்டவர் ஒருவரையேனும் மார்போடு தழுவி இருக்கிறார்கள் என்று காட்ட முடியுமா ?

இந்து மதம் என்ற பெயரில் ஏற்றத் தாழ்வுகளை கற்பித்து உயர்ந்தோர் என்று கூறிக் கொள்பவர்கள் ஏழைகளின் இரத்தத்தை உரிஞ்சிய மாமிச பிண்டங்களாக இருந்ததைப் பொருத்துக் கொள்ள முடியாமல் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மதம் மாறினார்கள்.

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

பின்னூட்டம் இட்டுள்ள திரு. நேசகுமார் அவர்களுக்கும் திரு.அனாமதேயம் அவர்களுக்கும் எனது மகிழ்ச்சியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//முதலில் தாழ்த்தப் பட்டோர் அனைவருமே பசு மாமிசம் சாப்பிடுபவர் அல்லர்;//
மேலே கனண்டபடி நான் எழுதியிருன்ந்தேன். அதற்கு, கிழே காணும்வாறு திரு.அனாமதேயம் ஒரு ப்தில் வாக்கியம் எழுதியுள்ளார்.

//எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று சொல்வதிலும் நஷ்டமில்லை நண்பரே, இது எப்படி இருக்கிறதென்றால் நாங்கள் தாழ்த்தப்பட்டவர் அனைவரையும் கோவிலுக்குள் விட மறுக்கிறோம் என்று சொல்லவில்லை. அவர்களாவே உள்ளே வரவிரும்பாதவர்களும் இருக்கிறார்கள் என்பது போல் இருக்கிறது//-திரு.அனாமதேயம்)

திரு. ரசூல் அவ்ர்கள் பசு மாமிசத்தை எல்லா தாழ்த்தப்பட்டவர்களும் சாப்பிடுவதைப் போல் பொதுமைப்படுத்தி எழுதியிருந்தார்; உண்மை அதுவல்ல என்று தெரியப்படுத்த நான் முதலில் கண்ட வாக்கியத்தை எழுதியிருந்தேன்."எல்லோரும் சாப்பிடுகிறார்கள்" என்று சொல்வது லாபமா; நஷ்டமா? என்பது கேள்வியில்லை; உண்மையா பொய்யா என்பதுதான். அது உண்மயில்லை அதைத்தான் நான் சொல்லியிருந்தேன்.அதையொட்டி தாங்கள் காட்டியுள்ள ஒப்பீடு சுத்தமாக விளங்கவிலை; எனக்கு பகுத்தறிவு போதவில்லை.

//காலில் போட்டுக் கொள்ளும் தோல் செருப்பு, பசுவின் தோலா, எருமை தோலா என்று பார்த்து தான் போட்டுக் கொள்கிறீர்களா ? அல்லது தோல் செருப்புகள் அத்தனையும் மாடுகள் இயற்கையாக இறக்கும் போது எடுக்கப்பட்ட தோல்களில் இருந்து செய்யப்பட்டதா ?//-திரு.அனாமதேயம்)

பசு வதை கூடாது என்பதுதான் என் வாதம்; அதற்கான காரணங்களையும் எனக்கு எட்டியவரையில் விளக்கியிருந்தேன். இயற்கை மரணத்திற்குப்பின் உரித்த தோலா, அடித்து உரித்த தோலா என்று ஆராய்வதெல்லம் சாத்தியம் இல்லை என்று உங்கள் பகுத்தறிவிற்கு விளங்கியது எனது சிற்றறிவிற்கும் விளங்கியுள்ளது.

பசு வதையைத் தடை செய்தால் தோல் பொருள் பஞ்சம் வருமென்றால் நானும் உலகத்துடன் ஒட்ட ப்ளாஸ்டிக், ரப்பர், மரக்கட்டை செருப்புக்களை பாவித்து வாழ்வேன்; ஒன்றும் பிரச்சினையில்லை.

திரு.அனாமதேயம் அவர்களே, இதன் பிறகு தாங்கள் எழுதியிருக்கும் இரு பகுதிகளும் திரு. ரசூல் எழுதியிருக்கும் கருத்துக்களுக்கோ அதற்கு நான் எழுப்பியிருக்கும் சந்தேகங்களுக்கோ சிறிதும் தொடர்பில்லாதது. தங்கள் எழுதியுள்ள விஷயங்கள் தனியே விவாதிக்கப்பட வேண்டியது; நானும் தயார்.
தயவு செய்து எதைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறதோ அது தொடர்பான கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துங்கள். உங்கள் கருத்தும் அறியப்படும்; படிப்பவர் நேரமும் மிச்சப்படும்; அவசியம் இந்த விஷயத்தில் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள். நன்றி.

கால்கரி சிவா said...

//படைத்தவனும் படைக்கப்பட்ட பொருளும் ஒன்றே எனபதையே வேதாந்தம் சொல்கிறது. இதைத்தான் குரானும் சொல்கிறதா?
//

நிச்சயமாக இல்லை.

இறைவன் வேறு கடவுள் வேறு. படைப்பை நாங்கள் வணங்குவதில்லை படைத்தவனயே நாங்கள் வணங்குகிறோம் என்பது அவர்களின் அடிப்படை.

படைப்பும் படைத்தவனும் ஒரு நாணயத்தின் இரண்டுபக்கங்கள் என்பது நம் அடிப்படை.

என் நண்பர் திரு அரவிந்தன் நீலகண்டன் சொல்வார் “There Is No Creator or Creation Only The Dancer and His Dance"

தமிழில் இப்படி சொல்லலாமா?

படைத்தவனும் இல்லை படைப்பும் இல்லை நாட்டியகாரனும் அவனின் நடனம் மட்டும் தான் உண்டு

சிந்திக்க மறுப்பவர்களுடன் விவாதம் புரிவதில் அர்த்தமில்லை. அவர்கள் சிந்திப்பதை நிறுத்தி சுமார் 1400 வருடங்கள் ஆகிவிட்டன